காலுக்கு முத்தம்... முழங்காலிட்டு அஞ்சலி... அஜித்தின் எமோஷனல் வீடியோ
மறைந்த பிரபல கார் பந்தய வீரர் அயர்டன் சென்னா நினைவிடத்தில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் அஞ்சலி செலுத்தினார். பிரேசில் நாட்டை சேர்ந்த அயர்டன் சென்னா, கடந்த 1994-ம் ஆண்டு மே 1ம் தேதி, சான் மரினோ கிராண்ட் ப்ரீ பந்தயத்தின் போது உயிரிழந்தார். இவர், மூன்று முறை ஃபார்முலா1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இந்நிலையில், இத்தாலியில் உள்ள அயர்டன் சென்னாவின் நினைவிடத்திற்குச் சென்ற நடிகர் அஜித்குமார், சென்னாவின் காலில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த தருணம், ஒரு சிறந்த துடிப்பான வீரருக்குச் செலுத்தப்பட்ட உணர்வுப்பூர்வமான அஞ்சலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
