தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 100 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீசார், 105 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.