Kiruthiga Udhayanidhi | ``யார் செலிபிரிட்டி?’’ - வைரலாகும் கிருத்திகா உதயநிதி ட்வீட்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு, யாரைப் பற்றியது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் ஒரு 'செலிபிரிட்டி' என்றால் யார்? அது நீங்கள் யார் என்பதுக்கும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதுக்கும் இடையிலான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், நீங்கள் உண்மையில் யார் என்பதை மறந்து, மக்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள எண்ணமே நீங்கள் என்று நினைக்கத் தொடங்கினால்... நீங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார்.
