

அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் ஊழியர்கள் என 40 பேருக்கு நோய் தொற்று அண்மையில் உறுதியான நிலையில், அங்குள்ள அனைவருக்கும், பரிசோதனை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிகிச்சையில் இருந்து வரும் நோயாளிகள் , ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 1200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியானது இதில் கூடுதலாக 39 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்