Kilabakkam Bus Stand | "கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்" - தெற்கு ரயில்வே
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம், வரும் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, சென்னை சென்ட்ரலில் தூய்மை சேவை பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை, நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை ஒட்டி, தெற்கு ரயில்வே சார்பில் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
