"மூன்று மகள்களையும் காப்பாத்துங்க..?" தாய் அளித்த புகார்! தம்பதியை தட்டிதூக்கிய போலீஸ்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது மூன்று மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரில், பெங்களூரை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். குப்புரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரெத்தினகிரி- கார்த்திகை செல்வி தம்பதியின் மூன்று மகள்களை
பெங்களூரை சேர்ந்த கார்த்திக்-கிரிஷ்மா தம்பதி வேலைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதற்கு அவரது தாய் மறுக்கவே, அந்த தம்பதி தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் குழந்தைகளை கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த கார்த்திகை செல்வி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் அந்த தம்பதியை கைது செய்து பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
