ஆள்கடத்தல் வழக்கு - கைதான டேனியல் மீது குண்டாஸ்?

x

சென்னை அரும்பாக்கத்தில், சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக உள்ள ராஜகுமரன் என்பவரை கடத்திய வழக்கில் கைதான 7 பேரில், டேனியல் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இவர், ஏற்கனவே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் மீது குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, கைதான டேனியல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது, தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்