சிறுவனை கடத்திக் கொலை செய்த சம்பவம் - இருவருக்கு வலை விரித்த போலீசார்

பல்லவாடா கிராமத்தை 8 வயது சிறுவனை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேகா என்ற பெண் கடத்திச் சென்று, கொலை செய்த நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான ரேகா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, பாலகிருஷ்ணன் மற்றும் ரமணைய்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணனும் அவருடன் தகாத உறவில் இருந்து வந்த ரேகாவும், குழந்தையை கடத்தி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்திச் செல்லும்போது சிறுவன் கத்தியதால், தனது துப்பட்டாவால் ரேகா வாயை அடக்கியபோது, சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்ததும், அதனை மறைக்க உடலை சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசியதும் விசாரணையில் அம்பலமானது

X

Thanthi TV
www.thanthitv.com