கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் ஆஜர், தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் ஆஜர், தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடியை சிலர் கடத்தி சென்றதாக கடந்த 10ஆம் தேதி அவரது கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் திருப்பதி அலப்பாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தன்னை யாரும் கடத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாய் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com