மேட்டூர் அணையில் இருந்து 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு
Published on

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்கள்

வெள்ளத்தில் மிதக்கின்றன. மேட்டூர் நகராட்சியில் உள்ள இந்திரா நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேபோல, மேட்டூர் - பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த பகுதியில் உள்ள 16 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் - எடப்பாடி சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இதுவரை 137 டி.எம்.சி நீர் திறப்பு - நடப்பு ஆண்டில் அதிகபட்ச நீர் வரத்து 1,85,000 கன அடி

மேட்டூர் அணையில் இருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாகவுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச நீர் வரத்து என கருதப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com