

கேரளாவில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிரபல கவிஞரின், தமிழ் மரபு திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம், 'கடவுளின் மகள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் பெண்ணாக மாறினார். தனது பெயரையும், விஜயராஜ மல்லிகா என மாற்றினார். இதைத் தொடர்ந்து, அவரை மென் பொறியாளரான ஜாஷிம், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி, மாலை மாற்றி, இலக்கிய துறை அறிஞர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. பெண்ணாக மாறியவரின் 'கடவுளின் மகள்' என்ற கவிதைத் தொகுப்பு, சென்னை பல்கலைக் கழக தமிழ் எம்.ஏ. பிரிவில் பாடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.