தமிழக சிறையில் கேரள கைதி திடீர் மரணம்
ராமநாதபுரம் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு
ராமநாதபுரம் சிறைச்சாலையில் கேரளாவை சேர்ந்த கைதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த கைதி பிஜு என்பவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு
ராமநாதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிறை வளாகத்திலேயே பிஜு திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறை காவலர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் பிஜு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.. உடற்கூராய்வுக்கு பிறகே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.
Next Story
