Kanyakumari | சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்த கேரள படகு - உயிருக்கு போராடிய மீனவரை மீட்ட மீனவர்கள்

சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்த கேரள படகு - உயிருக்கு போராடிய மீனவரை மீட்ட மீனவர்கள்

சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்த கேரள படகு - உயிருக்கு போராடிய மீனவரை பத்திரமாக மீட்ட குமரி மீனவர்கள் கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்த கேரள நாட்டுப்படகில் இருந்து, உயிருக்கு போராடிய மீனவர் ஒருவர் குமரி மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார். குமரி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரள மீனவரின் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில், படகின் மீது அமர்ந்தபடி உதவிக்காக காத்திருந்த மீனவரை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீட்டு தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடுக்கடலில் மீனவர் உயிருக்கு போராடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com