

திமுக எம்எல்ஏ காத்தவராயன், மறைவுக்கு, வணிகவரித்துறை அமைச்சர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன், அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றியவர் என கூறியுள்ளார். அவரது இறப்பு வருத்தம் அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.