Kayal Subashini | `கயல்’ சீரியல் நடிகை மரண விவகாரத்தில் திடீர் பரபரப்பு - பொருந்தாத FIR, பாஸ்போர்ட்

`கயல்’ சீரியல் நடிகை மரண விவகாரத்தில் திடீர் பரபரப்பு - பொருந்தாத FIR, பாஸ்போர்ட்

நடிகை சுபாஷினி உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் த*கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை சுபாஷினி உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த நடிகை சுபாஷினி சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சுபாஷினி வீட்டில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து பதப்படுத்தப்பட்டுதனியார் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெயரில் சிக்கல் உள்ளதால் சுபாஷினியின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எப்ஐஆரில் உள்ள பெயருக்கும், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் வேறுபாடு இருப்பதால், உடலை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் இலங்கை எம்பி பரிந்துரையுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர். தூதரகத்தின் அனுமதி கிடைத்தவுடன், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக இலங்கைக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com