தமிழகத்தை உலுக்கிய கவின் கொலை - சுர்ஜித்துக்கு.. கோர்ட் அதிரடி உத்தரவு
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் உள்ளிட்ட மூவருக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மென்பொருள் பொறியாளர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன், மற்றும் உறவினர் ஜெயபாலன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். இவர்கள் மூவரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வருகிற 23ந்தேதி வரை, மேலும்15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Next Story
