திடீரென மயங்கி விழுந்த கவினின் தாய்

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். நெல்லையில் இருந்து கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது கவின் உடலைப் பார்த்ததும் அவரது அம்மா மயங்கி விழுந்தார். கவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். 

X

Thanthi TV
www.thanthitv.com