விஜய்க்காக வாசலிலே காத்திருந்த கவின் அப்பா -சட்டென வந்து நின்ற கார்
விஜய் வருவதாக கவின் வீட்டு முன் திரண்ட கூட்டம் - இறுதியில் ட்விஸ்ட்
ஐ.டி ஊழியர் கவின் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் வருவதாக தகவல் வெளியான நிலையில், நள்ளிரவில் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் கடந்த 27ஆம் தேதி பாளையங்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இரவு 11 மணியளவில் தவெக தலைவர் விஜய், கவினின் இல்லத்திற்கு ஆறுதல் கூற வருவதாக தகவல் பரவியது. இதனையறிந்து கவின் வீட்டின் முன் உறவினர்கள் திரண்ட நிலையில், கவினின் தந்தை சந்திர சேகர் வீட்டின் வாசலில் காத்திருந்தார். அப்போது திடீரென வந்த காரை பார்த்த அனைவரும் விஜய் வந்ததாக எண்ணி காரை நோக்கி சென்றனர். ஆனால் அது திருச்செந்தூர் செல்ல வழி தவறி வந்தவர்கள் என்று தெரிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story
