Kauvery Hospital | காவேரி மருத்துவமனை சார்பில் உடல் பருமனுக்கான 'சமத்வா' சிறப்பு மையம்

காவேரி மருத்துவமனை சார்பில் உடல் பருமனுக்கான 'சமத்வா' சிறப்பு மையம்

#KauveryHospital | #health | #healthylifestyle சென்னையில் காவேரி மருத்துவமனை சார்பில் உடல் பருமனுக்கான 'சமத்வா' சிறப்பு மையத்தை முன்னாள் ஆளுநரும் பாஜக நிர்வாகியுமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், தான் பா.ஜ.க. மாநில தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன் 55 கிலோ எடையில் இருந்ததாகவும், அந்தப் பொறுப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்போது 85 கிலோவாக எடை அதிகரித்துவிட்டதாகவும் கலகலப்பாகத் தெரிவித்தார். மேலும், உடல் பருமனை ஒரு நோயாக அறிவித்து அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com