Kauvery Hospital | Heart valve | முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை

முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை

Kauvery Hospital | Heart valve | முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை

முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை சென்னை காவேரி மருத்துவமனையில் இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சையின் மூலம் செயற்கை வாழ்வை பொருத்தி சாதனை படைத்துள்ளது. கடுமையான இதய வால்வு கசிவால் பாதிக்கப்பட்ட 63 வயது முதியவருக்கு 'டாவர்' எனப்படும் குறைந்த ஊடுருவல் சிகிச்சை முறையில், அதிநவீன ஹேங்கர் செயற்கை வால்வு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர் அனந்தராமன் தலைமையிலான குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதய வால்வு இதழில் ஏற்பட்ட துளை காரணமாக அவதிப்பட்ட நோயாளிக்கு, செயற்கையான ஹேங்கர் வால்வு பொருத்தப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதற்கான கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது என்றும், இந்த சிகிச்சைக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தார்.

#kauveryhospital #heartvalve #thanthitv

X