கத்தி படம் தொடர்பான வழக்கு - நடிகர் விஜய், லைகா வழக்கிலிருந்து விடுவிப்பு

கத்தி படம் தொடர்பான வழக்கிலிருந்து நடிகர் விஜய், லைகா படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோரை விடுவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கத்தி படம் தொடர்பான வழக்கு - நடிகர் விஜய், லைகா வழக்கிலிருந்து விடுவிப்பு
Published on

கத்தி படம் தொடர்பான வழக்கிலிருந்து நடிகர் விஜய், லைகா படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோரை விடுவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் "கத்தி" என்ற திரைபடமாக எடுத்துவிட்டார் என்று கூறி ராஜசேசர் என்பவர் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி லைகா நிறுவனம், நடிகர் விஜய் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.அப்போது தஞ்சை நீதிபதி இருப்படங்களை பார்த்துவிட்டு, வழக்கில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் முருகதாஸை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறி வழக்கிலிருந்து நடிகர் விஜய், லைகா நிறுவனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுவித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com