திமுக எம்பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் விசாரணை, 100 கேள்விகள்

x

திமுக எம்பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் விசாரணை, 100 கேள்விகள்

  • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக திமுக எம்பி கதிர் ஆனந்திடம், அமலாக்கத்துறையினர் சுமார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
  • கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பண விநியோகம் செய்ததாக, திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு சுமார் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.
  • இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து, கதிர் ஆனந்த்க்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்டதில், சுமார் 14 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • இதுதொடர்பாக ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான கதிர் ஆனந்திடம், 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்