

சென்னை காசிமேட்டில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி மீனவ பெண்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டார். மேலும் இந்திய கடலோர காவல்படை மூலம் எந்தெந்த இடங்களில் தேடப்பட்டன என்பது குறித்து எடுத்துரைப்பதற்காக ராயபுரத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு மீனவர்களின் உறவினர்களை அழைத்து சென்றார்.