

சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து, தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது. சுனாமி பேரலை தாக்கி பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று காசிமேடு கடற்கரையில் மலர்வளையம் வைத்து பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வரையப்பட்டிருந்த மணல் சிற்பம் காண்போரை கண்கலங்க வைத்தது.