வாட்ஸ்அப்பில் பரவிய தகவல்.. கலெக்டர் ஆபிஸில் குவிந்த மக்களால் அதிர்ச்சி | Karur

கரூரில் உரிமைத்தொகை வழங்கக்கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரித்ததில், விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததாக பெண்கள் கூறினர். உடனடியாக உரிமைத்தொகை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com