

கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர், கந்துவட்டிக்காரரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.பணத்தை தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மனம் உடைந்த அந்தோணிராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்தோணிராஜை தடுத்து நிறுத்தினர்.பின்னர் அவர்கள் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.