Karur | கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட `பொக்கிஷம்’

கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட `பொக்கிஷம்’

Karur | கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட `பொக்கிஷம்’ #karur #ancienthistory #thanthitv கரூர் மாவட்டம் சிவாயம் கிராமத்தில் விவசாய நிலத்தை தோண்டும்போது 4 அடி உயர பழமை வாய்ந்த மண்பானை கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவபுரீஸ்வரர் கோயிலுக்கு பின்னால் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீரமைக்கும்போது இந்த பானை கண்டுபிடிக்கப்பட்டது. ஆறுமுகம் கொடுத்த தகவலின்பேரில் வந்த வருவாய்த்துறையினர் பழங்கால மண் பானையை பத்திரமாக மீட்டனர். தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பிறகே, இது முதுமக்கள் தாழியா அல்லது தானியங்கள் சேமித்து வைக்கும் பானையா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com