

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 900 ரேபிட் கிட் உபகரணம் வந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுபபு நடவடிக்கையில், சிறப்பாக பணியாற்றும் சுகாதாரம், உள்ளாட்சி, நகராட்சி, காவல் உள்ளிட்ட துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.