Karur || சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு தர்ம அடி
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு தர்ம அடி
கரூரில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் நபரை உறவினர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயனூர் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போன நிலையில், அக்கம் பக்கத்தினர் தேடியுள்ளனர். பக்கத்து வீட்டில் இருந்த விஜய் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
