Karur | ஓடும் பைக்கில் பாயில் படுப்பது போல் படுத்த நபர் - எதிர்பாரா நேரத்தில் இடியாய் இறங்கிய கர்மா

கரூர்-திருச்சி செல்லும் பிரதான சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து திருமாநிலையூர் சென்ற ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, அதன் மீது படுத்துக்கொண்டும், இரண்டு கால்களையும் பின்புறமாக வைத்துக்கொண்டும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு பசுபதி பாளையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com