Karur Love Issue | எமன் வடிவில் ஜன்னல் வழியே வந்த முன்னாள் காதலன் - அலறி துடித்த கல்லூரி மாணவி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். குளக்காரன்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும், ரஞ்சித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் காதலை அந்த மாணவி முறித்துக்கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஆத்திரம் அடைந்த ரஞ்சித், கல்லூரி மாணவி உறங்கிக்கொண்டு இருந்தபோது ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்றுவரும் சூழலில், இளைஞரை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.
Next Story
