பால் பண்ணை ஓனரை கடத்த முயன்ற மர்ம நபர்கள் - பகீர் சிசிடிவி

x

கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள பழனிச்சாமி என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது பால் பண்ணைக்கு செல்லும் போது, செங்குந்தபுரம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை காரில் கடத்த முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட பழனிச்சாமி கத்தி கூச்சலிட்ட நிலையில், மர்ம நபர்கள் அவரை விட்டு விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்