Karur | Campaign | தீவிர பிரசாரம்.. முதியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய திமுக வேட்பாளர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான சி.கே.ராஜா, செல்லிபாளையம், கோயம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அவருக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு திமுக அரசு 900 கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்களை வழங்கியுள்ளதாகவும், தன்னை வெற்றி பெற செய்தால் கிருஷ்ணராயபுரம் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என தெரிவித்தார்.
