அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜோதிமணி நன்றி

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார்
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜோதிமணி நன்றி
Published on
கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தமிழகத்தை ஒடுக்குகின்ற செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறினார். தமிழகத்துக்கு கெடுதல் விளைவிக்கும் எந்த திட்டங்களையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com