கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் அத்திவரதர் தரிசனம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் அத்திவரதர் தரிசனம்
Published on

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். பள்ளிகொண்ட நிலை முடிந்து, நிற்கும் கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. 35ஆம் நாளான இன்று, கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழி எம்.பி.யின் தாயாருமான ராஜாத்தியம்மாள், வி.ஐ.பி.தரிசனம் செய்தார். துளசி மாலை, பாதாம், முந்திரி, உலர் பழங்களை கொடுத்து, ராஜாத்தியம்மாள் தரிசனம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சயன கோலத்தின் போதும் தரிசனம் செய்த ராஜாத்தியம்மாள், மீண்டும் நின்ற கோல அத்திவரதரை தரிசனம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com