karunanidhi | birthday | முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கோலாகலம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கோலாகலம்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த கோவளம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ECR கோவளம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்த விழாவில், கோவளம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், எஸ்.டி.எஸ். பவுண்டேஷன் அறக்கட்டளையின் நிறுவனருமான ஜே.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்தார். செம்மஞ்சேரி குப்பம், ஊராட்சி மன்ற அலுவலகச் சாலை, கோவளம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் அவர், திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் பேசிய சுந்தர், கலைஞரின் பிறந்தநாளை, தோழமை கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக கொண்டாடியது போல், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட்டு 90 சதவீத வாக்குகளை பெற்றுத் தருவோம் என்று உறுதியேற்றார்.
