Karthik Subbaraj| கையில் புது பட ஸ்கிரிப்ட்.. நேராக அங்கே சென்ற கார்த்திக் சுப்புராஜ்
கையில் புது பட ஸ்கிரிப்ட்.. நேராக அங்கே சென்ற கார்த்திக் சுப்புராஜ்
#karthiksubbaraj #karthiksubbarajnewmovie புது பட ஸ்கிரிப்ட் உடன் கார்த்திக் சுப்புராஜ் சாமி தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். புதிய படத்தின் ஸ்கிரிப்டை கையில் வைத்து அண்ணாமலையாரை வழிபட்ட அவர், உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் தரிசனம் செய்து, வைகுண்ட வாசல் அருகே நின்று திருவண்ணாமலை மலையையும் வணங்கினார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம், மாலை மற்றும் அண்ணாமலையார் படம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கார்த்திக் சுப்புராஜுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
