

எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வருமான வரி வழக்கு விசாரணைக்கு தடை கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளதால், வழக்கை வேறு நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.