கர்நாடக மாநில கொடியை அகற்றிய விவகாரம்: இரு மாநில எல்லைகளில் போலீசார் குவிப்பு

கர்நாடக ஐயப்ப பக்தர்களின் வாகனத்தில் கட்டப்பட்டு இருந்த கர்நாடக மாநில கொடியை பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தமிழக போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில கொடியை அகற்றிய விவகாரம்: இரு மாநில எல்லைகளில் போலீசார் குவிப்பு
Published on
கர்நாடக ஐயப்ப பக்தர்களின் வாகனத்தில் கட்டப்பட்டு இருந்த கர்நாடக மாநில கொடியை பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தமிழக போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டதையடுத்து கன்னட அமைப்பினர் தமிழக போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடக மாநில கொடியுடன் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓசூர் பகுதியில் கன்னட அமைப்பினரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com