சிறுமியிடம் சில்மிஷம்... டீ மாஸ்டரை பாத்ரூம் ரூபத்தில் பழிதீர்த்த கர்மா

x

சென்னை கொருக்குப்பேட்டையில் 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டீ மாஸ்டர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சற்று மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 58 வயதான துரைராஜ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் . இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் துரைராஜை அடித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது கழிவறைக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்ற துரைராஜன், வழுக்கி விழுந்ததில் வலது கை இடது கால் முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்