

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு துணிக்கடைக்கு 2 பெண்கள் வந்துள்ளனர். துணிகளை வாங்குவது போல நீண்ட நேரமாக சுற்றி வந்த அவர்கள் கடையில் இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி துணிகளை அபேஸ் செய்தனர். விலை உயர்ந்த புடவைகளை எல்லாம் பார்த்து பார்த்து அவர்கள் தங்கள் பைகளில் எடுத்து வைத்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் கேமரா இருப்பதை பார்த்தும் கூட தொழிலில் கவனம் செலுத்தி அவர்கள் திருடும் காட்சிகளை கொண்டு 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.