சுடுகாட்டு எல்லை கல் ஊன்றுவதில் தகராறு : 100க்கும் மேற்பட்டோர் கைது - பதட்டம் நீடிக்கிறது

காரைக்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீஸார் தடியடி நடத்தியதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
சுடுகாட்டு எல்லை கல் ஊன்றுவதில் தகராறு : 100க்கும் மேற்பட்டோர் கைது - பதட்டம் நீடிக்கிறது
Published on
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில், இரு சமூகத்தினரிடையே சுடுகாட்டு எல்லைக்கல் ஊன்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சமாதான முயற்சியில் ஈடுபட்டும் பலனளிக்காத நிலையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால், கலவரக்காரர்கள் மீது சிறு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அப்போது வீட்டிற்குள் பதுங்கி இருந்து கற்களை வீசிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரம் பரவாமல் இருக்க கோட்டையூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு டிஎஸ்பி உட்பட 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com