கோயில் நிலத்தை ஃபிளாட் போட்டு விற்ற சப்-கலெக்டர் - நீதிமன்றம் கொடுத்த திடீர் ட்விஸ்ட்

x

கோயில் நிலத்தை ஃபிளாட் போட்டு விற்ற சப்-கலெக்டர் - நீதிமன்றம் கொடுத்த திடீர் ட்விஸ்ட் | Karaikal

கோயில் நிலத்தை மோசடி செய்து வீட்டு மனைகள் போடப்பட்ட விவகாரத்தில் கைதான துணை ஆட்சியருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காரைக்காலை அடுத்துள்ள கோவில்பத்து கிராமத்தில் பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்துப் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர் விசாரணையில் இடைத்தரகர் சிவராமன், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். தொடர்ந்து, வீட்டு மனைகளை நில அளவை செய்து கொடுத்த நில அளவையர் ரேணுகா தேவியைக் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்

துணை ஆட்சியர் ஜான்சனை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜேசிபி ஆனந்தை தேடி வந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் நில அளவையர் ரேணுகா தேவியின் கணவர் குருவும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்