பாஜக மாவட்ட Ex தலைவரின் மனைவி - ரூ.1.19 கோடி செலுத்த உத்தரவு
கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ .க முன்னாள் தலைவரின் மனைவி, ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ரெங்கநாயகி கணேசன் செயல்பட்டு வந்தார். ஊராட்சி ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரை நடைபெற்ற வரவு செலவுகள் மீதான தணிக்கையில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், ரெங்கநாயகி கணேசன் மீண்டும் கூடுதலாக ஒரு கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 262 ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
