சூரியனை காண கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்.. பார்க்க பார்க்க கண்ணைக் கவரும் காட்சி

கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பின்னணியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com