கன்னியாகுமரி: தொடர் மழையால் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு - சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே பள்ளியாடி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி: தொடர் மழையால் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு - சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் பள்ளியாடி அருகே தெங்கன்குழி பகுதியில் தாழ்வான இடத்தில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நேற்று நள்ளிரவு தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சரக்கு ரயில் மற்றும் ரயில்வே பணிக்காக தொழிலாளர்கள் செல்லும் ரயிலும் வழியிலேயே நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com