பெண்களை குறிவைத்து நகை பறிப்பு - இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
பெண்களை குறிவைத்து நகை பறிப்பு - இளைஞர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கொல்லங்கோடு, ஆலமூடு சந்திப்பில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், இளைஞர் ஒருவர் தமது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை மடக்கிபிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞரின் பெயர் பிரவீன் என்பதும், பெண்களிடம் தங்க செயின்களை பறித்ததும் தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com