Kanyakumari | Kerala | தமிழக கோவில் விக்ரகங்கள் கேரளா செல்லும் பாரம்பரிய விழா | Navaratri Special

x

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அதற்காக சுசீந்திரம் கோவிலில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன் உள்ளிட்ட விக்ரகங்களை யானை மற்றும் பல்லக்கில் கேரளாவிற்கு எடுத்து செல்வார்கள். தற்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படுவதால், மேள தாளங்கள் முழங்க விக்ரகங்கள் பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டது. களியக்காவிளையில் இரு மாநில போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் பொதுமக்கள் சூழ நடைபெற்ற இந்த விழாவில் கேரள ஆளுநர், விளவங்கோடு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்