முன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
முன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து
Published on

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்த தங்கராஜிடம் ராதாகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த பாஜக பிரமுகர் மனோகரன் என்பவர், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் தான் வைத்திருந்த கத்தியால் மனோகரனை குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோகரனின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த மனோகரனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com