கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது. மோகன்ராஜ், வாட்சன், ரூபன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வலைகளை தங்கும் கூடத்தில் வைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்த போது வலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. தீயை அணைக்க முயற்சித்தும் காற்றின் வேகம் காரணமாக வலைகள் முற்றிலும் எரிந்து சேதமானது.